search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gramophone Record"

    • 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    • போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது தும்மக்குண்டு கிராமம். இங்கு மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையில் புதிய பரிணாமங்கள் தலையெடுத்த போதிலும் பழமைக்கு என்றுமே மவுசு உண்டு என்பதை இந்த கிராம மக்கள் மெய்ப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை போட்டி திருவிழா தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    அவர்கள் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.

    இரு தரப்பினரிடையே யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று சுற் றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாகவும் இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    ×