search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummidipoondi protest"

    கும்மிடிப்பூண்டியில் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், சிப்காட் தொழிலாளர்களும் பொது மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் விபத்துகளும் அப்பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சம்பத், ஜெகன், ஏழுமலை, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. நிர்வாகிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பெருவாயல்காலனி. இங்கிருந்து செல்லும் பொன்னேரி சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பெருவாயல் காலனியில் உள்ள 20 வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது சம்பந்தமாக அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரங்களுடன் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறினர்.

    ஆனால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் சென்னை- கொல்கத்தா சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்திரா என்ற பெண் தனது உடலில் மண்எண்ணையை ஏற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 6 பெண்களை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.

    டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
    ×