என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gurmeet ram rahim"
- 2 பேரை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து 'பூரா சச்' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
- 2017-ம் ஆண்டு இரண்டு பெண்களை கற்பழித்த வழக்கில் சிறைத்தண்டனை.
- கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு அடிக்கடி பரோல் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் ஏழு முறை பரோலில் வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முறை வெளியில் வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு பஞ்சாப்- அரியானா நீதிமன்றத்தில் வந்தபோது, குர்மீத் ராம் ரஹீம்-க்கு பரோல் வழங்கப்பட்டது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அவர் மார்ச் 10-ந்தேதி சரண் அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை அவருக்கு பரோல் வழங்க அரசு முடிவு செய்யும் என்றால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் இந்த சலுகையை பெற்றுள்ளார். இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சலுகை பெற்றுள்ளார்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எத்தனை பேர் இதே அடிப்படையில் பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர். எத்தனை பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுளள்து.
ராம் ரஹீம்-க்கு மூன்று முறை 91 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 21 நாட்கள், ஜூலை மாதம் 30 நாட்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #GurmeetRamRahim
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்