search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happy hormones"

    • மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது.
    • சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது.

    மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை வளர்ப்பு எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

    சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது பெற்றோரின் கடமை. அப்போதுதான், `மகிழ்ச்சியான ஹார்மோன்கள்' மூளையில் உருவாகும்.

    செரோடோனின், டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடோசின்... இவை நான்கும் தான் மகிழ்ச்சியான ஹார்மோன் என அறியப்படுகின்றன. இவை மூளையில் உற்பத்தியாகும் அளவை பொறுத்துதான், குழந்தைகளின் மனநிலையும், உணர்ச்சியும் வெளிப்படும். அவை குழந்தைகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இயங்க வழிவகுக்கும். அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும்.

     செரோடோனின்: மனநிலை, தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. (சூரிய ஒளியில் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, பருப்பு வகைகளை உண்பதன் மூலம் இதை அதிகரிக்கலாம்.)

    டோபமைன்: இன்பம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. (ஆழ்ந்து தூங்குவது, பரிசுப்போட்டிகளில் கலந்துகொள்வது, மீன், முட்டை, பால் உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம்)

    எண்டோர்பின்: இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றன. (சிரிப்பு, சுவாச பயிற்சி, இசை, கார உணவுகள் மூலம் அதிகமாக்கலாம்.)

    ஆக்ஸிடோசின்: இது பிணைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கிறது. (அரவணைப்பு, பிணைப்புக்கு உதவும்)

    இந்த செயல்பாடுகளை பெற்றோர் தங்களது தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகளின் `மகிழ்ச்சியான ஹார்மோன்' அளவை அதிகரிக்கலாம். அது குழந்தைகளின் ஒட்டுமொத்த மனநிலையையும், நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு பெற்றோர் தங்களது வீட்டை குழந்தைகளின் மகிழ்ச்சியான இடமாக மாற்றும்போது, அவர்களது மூளை மேம்படும். திறமைகளுடன் தனித்துவமாக வளர்வார்கள். கல்வி, விளையாட்டு, பரிசுப்போட்டிகள் என எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பார்கள்.

    ×