என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Haryana Minister"
- சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
- மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.
இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.
இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்