என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hasina
நீங்கள் தேடியது "Hasina"
வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #BangladeshPM #Hasina
டாக்கா:
வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina

இந்நிலையில், நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina
வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்றதால் ஷேக் ஹசினா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.பி. ஆனார். #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
டாக்கா:
வங்காளதேசத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
இதேபோல், நரைல் 2 தொகுதியில் போட்டியிட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மஷ்ரபே பின் மோர்ட்டாசா 2,74,418 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
வங்காளதேசத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.
இதேபோல், நரைல் 2 தொகுதியில் போட்டியிட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மஷ்ரபே பின் மோர்ட்டாசா 2,74,418 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
×

X