என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » helicopter scandal
நீங்கள் தேடியது "Helicopter scandal"
ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீனை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. #RajivSaxena #DelhiHighCourt
புதுடெல்லி:
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். மற்றொரு இடைத்தரகரான துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவும் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
இந்நிலையில், நேற்று ‘எய்ம்ஸ்’ அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி அரவிந்த் குமார், ராஜீவ் சக்சேனாவின் இடைக்கால ஜாமீனை 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். #RajivSaxena #DelhiHighCourt
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். மற்றொரு இடைத்தரகரான துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவும் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
அவர் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால், தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 14-ந் தேதி அவருக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி அரவிந்த் குமார், சக்சேனாவின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்குமாறு ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியை கேட்டுக்கொண்டார்.
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தி தொடர்பான கேள்விகளை தவிர்க்க முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
புதுடெல்லி:
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் கைதான வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.
முன்னதாக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேலை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இடையே வழக்கறிஞரை சந்திக்கும் அனுமதியை பெற்றுள்ள கிறிஸ்டியன் மைக்கேல், இந்த சலுகையை தவறாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக, சோனியா காந்தி தொடர்பான அதிகாரிகளின் கேள்விகளை தவிர்ப்பது எப்படி? என்று துண்டு சீட்டு மூலம் தனது வழக்கறிஞரிடம் கிறிஸ்டியன் மைக்கேல் ஆலோசனை கேட்பதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இந்த தகவல் ஊடகங்கள் மூலம் இன்று வெளியாக தொடங்கியதும், வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் இத்தாலி பெண்ணான சோனியா காந்தி மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி ஆகியோர் வசமாக சிக்கியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்துகொண்ட சமரசத்தை இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் செயல்பாடுகள் விளக்குவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சி.பி.ஐ. விசாரணை காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam
புதுடெல்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.
துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த ஊழலில் இந்தியர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், அவரை தங்களிடம் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார்.
கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் இன்றுடன் முடிவடைவதால் கிறிஸ்டியன் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடன் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.
இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
மேலும், மைக்கேலை அவரது வழக்கறிஞர் காலை அரை மணி நேரமும் மாலையில் அரை மணி நேரமும் சந்தித்து பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #ChristianMichel,#AgustaWestlandscam #VVIPchopperscam #CBI

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

×

X