search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Defamation"

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் பற்றி அவதூறாக பேசிய நிலையில், நடிகர் சித்தார்த் எச்.ராஜாவை தாக்கி கருத்து பதிவிட்டுள்ளார். #HRaja #Siddharth
    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

    இதுகுறித்து பதில் அளித்த எச்.ராஜா, தான் நீதிமன்றம் குறித்து தவறாக பேசவில்லை என்றும், பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து எச்.ராஜாவை தாக்கி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது,

    ` போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீசார், நீதிமன்றம், போலீஸ் மற்றும் சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கின்றனர். இந்த இந்துத்துவா பயங்கரவாதி எச்.ராஜா சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பார்க்கிறார். இது வெட்கக்கேடானது ' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, எச். ராஜா உள்பட 8 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. #HRaja #Siddharth

    ×