என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "High Egg Laying"
- புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
- வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.
நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.
நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.
நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.
பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.
கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.
வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.
இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.
வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.
நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.
ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்