search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Mahasabha"

    • அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
    • சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.

    அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.

    இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.

    மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று மறுப்பு தெரிவித்தது. #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில், மசூதி தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    ராமஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.சித்திக் என்பவரின் சட்டப்படியான வாரிசு தொடர்ந்த இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற அவசியம் இல்லை என கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இந்த வழக்கின் பிற அம்சங்கள் குறித்து அக்டோபர் 29-ந் தேதி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதன்படி இந்த வழக்கு கடந்த மாதம் 29-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அத்துடன் அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உள்ளிட்ட சுமார் 14 மனுக்களும் உடன் இணைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தன. இதில் விசாரணை துவங்கியதுமே இந்த வழக்குக்காக உரிய அமர்வு அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அல்லது அந்த அமர்வின் வசதிக்கு ஏற்ப இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்ஜய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று அகில பாரத இந்து மகாசபா தரப்பில் வக்கீல் பருன் குமார் சின்கா ஆஜராகி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது இந்த வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதால் இதனை அவசர வழக்காக கருதி விரைவில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே நாங்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளோம். இந்த மனுக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விரைந்து விசாரிக்கும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர். #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×