என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hindu marriage"
- திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல.
- இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.
புதுடெல்லி:
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பந்தத்தில் நுழைவதற்கு முன்பு, இந்திய சமூகத்தில் திருமணம் எவ்வளவு புனிதமானது என்பதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. அழுத்தம் கொடுத்து, வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல.
ஒரு ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை பெற்று, எதிர்காலத்தில் குடும்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்ச்சி. 2 தனிநபர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணியமான, சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் புனிதமான நிகழ்ச்சி.
ஆனால், இந்த மனுதாரர்களை போல், இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள்.
''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.
இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.
எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது. திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஒரு ஆதாரமாக கருதப்படலாம். ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்துக்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது. இந்து திருமண சட்டப்படி, அதை திருமணமாக கருத முடியாது.
1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அஸ்வினி:- ஆண் குதிரை
பரணி:- ஆண் யானை
கார்த்திகை:- பெண் ஆடு
ரோகிணி:- ஆண் நாகம்
மிருகசீரிடம்:- பெண் சாரை
திருவாதிரை:- ஆண் நாய்
புனர்பூசம்:- பெண் பூனை
பூசம்:- ஆண் ஆடு
ஆயில்யம்:- ஆண் பூனை
மகம்:- ஆண் எலி
பூரம்:- பெண் எலி
உத்திரம்:- பெண் எருது
அஸ்தம்:- பெண் எருமை
சித்திரை:- பெண் புலி
சுவாதி:- ஆண் எருமை
விசாகம்:- ஆண் புலி
கேட்டை :- ஆண் மான்
மூலம்:- பெண் நாய்
பூராடம்:- ஆண் குரங்கு
உத்ராடம்:- கீரி,மலட்டு பசு
திருவோணம்:- பெண் குரங்கு
அவிட்டம்:-பெண் சிங்கம்
சதயம்:- பெண் குதிரை
பூரட்டாதி:- ஆண் சிங்கம்
உத்ரட்டாதி:- பெண் பசு
ரேவதி:- பெண் யானை
இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்
அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்
பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்
எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.
அந்த 5 மாங்கல்யங்கள் எவை தெரியுமா?
* திருமணத்தில் ஒன்று
* ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது)யில் ஒன்று
* பீமரத சாந்தி (70 வயது) யில் ஒன்று
* சதாபிஷேகத்தில் (80 வயது) ஒன்று
* கனகாபிஷேகத்தில் (96 வயது) ஒன்று
திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஊர்மக்கள் வாழ்த்த நிகழும் ஒரு வைபவம். அது பெரும்பாலானவர்களுக்கு வாய்த்து விடக்கூடிய ஒன்று. ஆனால் ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அவற்றை நடத்துவதற்கு பெரும் பாக்கியமும், பூர்வ புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது தவிர இது போன்ற வைபவங்களை செய்வது என்பது பொதுவாக ஆயுள் விருத்தியை பிரதானமாகக் கொண்டே அமைகிறது.
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் நான்கு சடங்குகளும், உறவு முறைகள் கூடி நின்று குதூகலத்தோடு பங்கேற்கும் போது அந்த தம்பதியரின் மனம் மகிழும். ‘நமக்கென்று இத்தனை சொந்தங்களா?’ என்கிற சந்தோஷம் அவர்களின் மனதை பரவசப்படுத்தும். மேலும் அந்த சடங்குகள் சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுவதும் காரணம்.
பூமியானது 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு 1½ ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு 1½ வருடங்களும், கேதுவுக்கு 1½ வருடங்களும் ஆகின்றன.
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் பிறந்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அந்த தினத்தில் தான், சம்பந்தப்பட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி, மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் ஒலியால், கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? தமிழ் வருடங்களாக மொத்தம் 60 வருடங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த 60 ஆண்டுகளுக்கான தேவதைகளையும், அந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வருணன், அமிர்தகடேஸ்வரம், நவநாயகர்கள், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பாலாம்பிகை ஆகியோரையும் சேர்த்துக் குறிப்பதற்காகவே 84 கலசங்கள் வைக்கப்படுகின்றன.
பிரபவ முதல் விஷூ வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்.
பீமரத சாந்தி
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வெற்றிகொள்ளும் மனிதன், அது முதல் தனது என்ற பற்றையும் துறக்க முயற்சி செய்ய வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டத்தைத் துறந்து, இந்த உலகில் வாழும் அனைவரும் தன் மக்களே என்றும், எல்லாரும் ஒரே குலம் என்றும் எண்ணும் எண்ணமானது ஒருவரது 70-வது வயதில் பூர்த்தியாக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து, அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் ‘பீமரத சாந்தி’யைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீமரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
சதாபிஷேகம்
70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும், இறைவனைக் காண முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வயதுடைய மனிதனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனையும், அனைத்தையும் இறைவனாகவும் காணும் நிலையை ஒரு மனிதன் 80-வது வயதில் அடைகிறான். அதே வேளையில் ‘சஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி’ என்றும் ஆயிரம் பிறை கண்டவன் என்ற தகுதியையும் பெறுகிறான். அந்த நேரத்தில் தான் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.
கனகாபிஷேகம்
இறையோடு இரண்டறக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு, 96 வயதில் கனகாபிஷேகம் செய்ய வேண்டும். அந்த கனகாபிஷேகத்தில் தான் ஒரு பெண், தன் கணவன் மூலமாக ஐந்தாவது மாங்கல்யத்தைப் பூட்டிக் கொள்கிறாள். மேலும் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்கு உரியவளாகவும் மாறுகிறாள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்