search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Test Championship"

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 150 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.
    • ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட். இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.

    ரூட் இப்போட்டியில் 71 ரன்களை அடித்தபோது அலஸ்டர் குக்கை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    அலாஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூ தனது 147 ஆவது டெஸ்ட் போட்டியில் 12,554* ரன்கள் அடித்துள்ளார்.

    முன்னதாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:

    சச்சின் டெண்டுல்கர்: போட்டிகள்: 200 | ரன்கள்: 15,921 | சதம்: 51 | சராசரி: 53.78

    ரிக்கி பாண்டிங்: போட்டிகள்: 168 | ரன்கள்: 13,378 | சதம்: 41 | சராசரி: 51.85

    ஜாக் காலிஸ்: போட்டிகள்: 166 | ரன்கள்: 13,289 | சதம்: 45 | சராசரி: 55.37

    ராகுல் டிராவிட்: போட்டிகள்: 164 | ரன்கள்: 13,288 | சதம்: 36 | சராசரி: 52.31

    ஜோ ரூட்: போட்டிகள்: 147* | ரன்கள்: 12,473 | சதம்: 34 | சராசரி: 50.91

    அலஸ்டர் குக்: போட்டிகள்: 161 | ரன்கள்: 12,472 | சதம்: 33 | சராசரி: 45.35

    • ஐ.சி.சி. சாம்பியன்ஷிப்பில் டெஸ்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை.
    • சச்சின் தெண்டுல்கர் சாதனையை நெருங்குகிறார்.

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட். இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறது. டெஸ்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள்ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அவர் 27 ரன்களை தொட்டபோது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமைய பெற்றுள்ளார்.

    இவர் ஏற்கனவே 2015, 2016, 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்களை அதிகமுறை கடந்த சச்சின் தெண்டுல்கர் சாதனையையும் நெருங்கி வருகிறார். சச்சின் தெண்டுல்கர் ஆறு முறை ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

    • அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
    • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா முன்னேறிய நிலையில் 2-வது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

    ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்திடம் ஒரு டெஸ்ட்டில் தோற்றால், இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

    இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே நாளில்தான் இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் தொடங்கியது.

    இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.

    அதன்பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்துள்ளது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ×