search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "I.I.T. Entrance Exam"

    • கடந்த மே 26-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது.
    • தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும்.

    முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின், இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும்.

    இதற்கிடையே நாடு முழுவதும் கடந்த மே 26-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இத்தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதினர்.

    இந்த நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் ஆவார்கள். ஐஐடி டெல்லி மண்டலத்தை சேர்ந்த வேத்லஹோட்டி 360 மதிப்பெண்களுக்கு 355 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். பெண்களில் ஐ.ஐ.டி. மும்பை மண்டலத்தைச் சேர்ந்த துவிஜா தர்மேஷ் குமார் படேல் 360க்கு 322 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். அவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.

    முதல் 10 இடங்களில் ஆதித்யா (ஐ.ஐ.டி. டெல்லி), போகல்பள்ளி சந்தோஷ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), ரிதம் கேடியா (ஐ.ஐ.டி. ரூர்க்கி), புட்டி குஷால் குமார் (ஐஐடி மெட்ராஸ்), ராஜ்தீப் மிஸ்ரா (ஐ.ஐ.டி. மும்பை), கோடூரி தேஜேஸ்வர் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), துருவி ஹேமந்த் தோஷி (ஐ.ஐ.டி. மும்பை), அல்லடபோனா எஸ்.எஸ்.டி.பி. சித்விக் சுஹாஸ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) ஆகி யோர் உள்ளனர்.

    ×