என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Incentive Training"
- ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதல்-அமைச்சர் காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார்.
திருப்பூர் :
பல்லடம் அருகே நாரணாபுரத்தில் ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரை சேர்ந்த 40 நிட்டிங் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) இம்மையத்தை உருவாக்கியுள்ளது.திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விழா மேடையில் இருந்தவாறு, காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார். பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து பொதுபயன்பாட்டு மையம் செயல்பாட்டை துவக்கியுள்ளது.
இது குறித்து விவேகானந்தன் கூறியதாவது :- பொதுபயன்பாட்டு மையத்தில் தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காலர் நிட்டிங், சர்க்குலர் நிட்டிங் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பூரில் 10ஆயிரம் நிட்டிங் நிறுவனங்கள் உள்ளன.ஹெல்பர், ஆபரேட்டர், போர்மேன், சர்வீஸ் என்ஜினீயர், டெக்னீஷியன் என 5 வகை பணியிடங்கள் உள்ளன. பொதுபயன்பாட்டு மையத்தில் தொழிலாளர்களுக்கு இப்பிரிவுகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி முடிப்போருக்கு அரசு அதிகாரிகள் அங்கீகாரத்துடன் கூடிய சான்று மற்றும் நிட்டிங் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும். திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதன் மூலம் நிட்டிங் துறை மேலும் பலம் பெறும்.அதிநவீன நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி டெனிம், புள்பாடி கார்மென்ட், தொழிற்சாலை பயன்பாட்டு கிளவுஸ் என பல்வேறுவகை மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள் தயாரிக்கப்படும். பொதுபயன்பாட்டு மைய உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து ஆடை உற்பத்தி துறையினரும் இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மையத்தால் பின்னலாடை துறையின் லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கிய பயணம் அதிவேகம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்