search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india australia Test series"

    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஜெயதேவ் உனத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜெயதேவ் உனத்கட் விளையாடவுள்ளார்.

    இவரை தொடர்ந்து காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத அய்யர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இடம் பெறுவது கடினம் என தகவல் வெளியாகி உள்ளது.

     

    என்.சி.ஏ-ல் பயிற்சி பெற்று வரும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வது போல சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட திரும்புவதற்கான விதிமுறை குறைந்தபட்சம் உள்நாட்டு சுற்றுகளில் ஒரு ஆட்டத்தையாவது விளையாடுவதாகும்.

    எனவே உடனடியாக டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினமாகும். ரஞ்சி டிராபி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிக்க மார்ச் 1-5 வரை நடைபெறும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு விளையாட அழைக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய முகாமில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×