என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "india vs england"
- இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
- ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான் இப்படி ஒரு பிட்சை பார்த்ததில்லை என ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது.
என ஸ்டோக்ஸ் கூறினார்.
- 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
- அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.
இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-
கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.
ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.
கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.
ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.
கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.
(தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.
என்று பேசினார்கள்.
- இங்கிலாந்து எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகினார்.
- கோலி விளையாடததற்கு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போடிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.
முதல் டெஸ்ட் தொடக்குவதற்கு முன்பு அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி கர்பமாகி உள்ளதால் அவர் விளையாடவில்லை எனவும் ஒருசிலர் அவரது தாயிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வந்தந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் எங்கள் தாய் உடல் நலத்துடன் உள்ளதாக விராட் கோலியின் சகோதரர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து விகாஸ் கோலி கூறியதாவது:-
என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை. எனது தாய் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
- ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.
ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
என்று பும்ரா கூறியுள்ளார்.
மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.
மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
லண்டனில் வானிலை அறிவிக்கையின்படி காலையில் வெயில் அடிக்கும் என்றும், பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் போட்டி தொடங்கினாலும் இடையில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. #ENGvIND #INDvENG #test
முதல் 15 நிமிடத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. நேகா கோயல் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.
54-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் கடைசி 7 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்தியா அடுத்த போட்டியில் வருகிற 26-ந்தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.
ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி 2000 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 8 ரன்கள் தேவையுள்ளது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்திலாவது 2000 ரன்னை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் 0, 9 அடித்ததன் மூலம் விராட் கோலியின் சராசரி 50-ற்கு கீழ் குறைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்