search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian billionaires"

    • முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி ஜாம் நகரில் நடைபெறுகிறது
    • கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக், கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்

    இந்தியாவின் நம்பர் 1 கோடீசுவரர் முகேஷ் அம்பானி (66). இவரது நிகர சொத்து மதிப்பு $115 பில்லியனுக்கும் மேல் உள்ளது.


    முகேஷ் அம்பானியின் இளைய மகனான 28 வயதான ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமணத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி குஜராத் மாநில ஜாம் நகரில் (Jam Nagar) தற்போது நடைபெறுகிறது.

    உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 விருந்தினர்கள் பங்கு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக குஜராத் ஜாம் நகரில் வந்து இறங்குகின்றனர்.

    முன்னதாக ஜாம் நகர் மக்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த விருந்து உபசாரம் நடைபெற்றது.

    ஆசியாவின் முன்னணி கோடீசுவரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்பதால், பல துறை சார்ந்த பிரபலங்களும் ஒரே இடத்தில் குவியும் அரிய நிகழ்வை இந்திய மக்கள் காண்கின்றனர்.

    பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, உலக தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பர்க், பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் , ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்.





    மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி அதிபர் சுந்தர் பிச்சை, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக புகழ் பெற்ற பாடகி ரிஹானாவின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    ×