search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvPAK Asia Cup"

    • டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.

    • ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது.
    • நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    ×