என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Inquiry Committee"
- ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
- மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே ரெயில்வே துறை சார்பில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இரண்டு பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்தா இதை மறுத்துள்ளார். லெவல் கிராசிங் கேட் எண் 94-க்கு முன்னால் ரெயில் தடம் புரண்டதாகவும், இதனால் லூப் லைனுக்கு மாறுவதற்கு முன்பு விபத்து நடந்ததாகவும் வாதிட்டுள்ளார். மேலும் ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் மெயின் லைன் வழியாக சிக்னல் மற்றும் பாயிண்ட் அமைக்கப்படும்போது லூப் லைனில் ரெயில் நுழைவதற்கான சாத்திய கூறு இல்லை என்று நிராகரித்துள்ளார்.
விபத்துக்கு சிக்னல் செயல் இழந்ததே காரணம் என்று ஆய்வு அறிக்கை கூறினாலும் அந்த சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கூறியிருப்பதால் டேட்டா லாக்கர் அறிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த டேட்டா லாக்கர் என்பது மைக்ரோ செயலி அடிப்படையிலான சிஸ்டமாகும்.
இது ரெயில்வே சிக்னலின் அமைப்பை கண்காணிக்கிறது. இதன் தரவை ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மை புலப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, பூர்வாங்க விசாரணையின் கட்டத்தில் வெவ்வேறு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது மிகவும் இயல்பானது.
ஒவ்வொருவரும் வெவ்வெறு கண்ணோட்டத்தை கொண்டு இருக்கலாம். ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே டிவிஷன் ரெயில்வே மேலாளர் ரின் கேஸ் ராய் கூறும் போது, பாதை உள்ளதா, அனைத்தும் சரியாக உள்ளதா போன்ற அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே கிரீன் சிக்னல் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக எந்த சூழலிலும் கிரீன் சிக்னல் இருக்க முடியாது.
யாரோ ஒருவர் அதை சீர்குலைக்கும் வரை உடல் ரீதியாக அதை கட்டுப்படுத்தும் வரை அது பசுமையாக இருக்க முடியாது. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்யும் டேட்டா லாக்கர் கூட சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விசாரணை குழுவின் கருத்து வேறுபாட்டினால் விபத்துக்கான காரணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்