search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspects drinking water"

    • நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் , மதுரை மண்டல தலைமை பொறியாளர் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே வைகை அணை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்றும் நிலையம் மற்றும் குருவியம்மாள்புரம் அருகில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வைகை அணை நீரினை ஆதாரமாக கொண்டு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி- தேனி ஆகிய ஊராட்சி ஒன்றிய ங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், அதன் நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கள பொறியாளர்கள் மற்றும் துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணி களை விரைந்து முடிக்க அலு வலர்களுக்கு அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் வேல்முருகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் நடராஜன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×