search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence Bureau"

    • கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினர். இந்த மத நிகழ்வில் கலந்து கொள்ள அக்கம் பக்க ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹத்ராஸில் கூடினர். ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்று முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி போலே பாபா ஆன்மிக சேவையாற்றுவதற்காக புலனாய்வு துறையில் செய்துவந்த பணியை ராஜினாமா செய்ததாக பலமுறை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    ஆன்மிக சேவையாற்ற 1990-க்களில் தான் மேற்கொண்டு வந்த புலனாய்வு துறை பணியை ராஜினாமா செய்ததாக தனது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் போலே பாபா தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள பதௌர் நகரி என்ற கிராமத்தில் நன்னே லால் மற்றும் கதோரி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் போலே பாபா.

    இவருக்கு இரண்டு சகோதரர்கள், இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவர் உத்தர பிரதேச காவல் துறையில் கான்ஸ்டபிலாக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த போலே பாபா அதன்பிறகு ஆன்மிக நாட்டம் காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    வழக்கமாக ஆன்மிக சேவையில் ஈடுபடுவோரை போன்று காவி உடை உடுத்தாமல் போலே பாபா வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுதவிர குர்தா-பைஜமா அணிவார். இவருக்கு வழங்கப்படும் நன்கொடை பணம் முழுவதையும் அவர் தனது பக்தர்களுக்கே செலவு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

    ×