search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interim Prime Minister"

    பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவி ஏற்றார். #Pakistan #PrimeMinister #NasirulMulk
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அங்கு புதிய அரசு பதவி ஏற்கிறவரையில் இடைக்கால அரசு செயல்படும். அதன் பிரதமராக ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் முல்க் (வயது 67), கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.

    இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் அப்பாசி முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷா, இடைக் கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் ஆளுங்கட்சியாலும், எதிர்க்கட்சியாலும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.

    அங்கு இருந்து வந்த அப்பாசி தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆயுள், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முடிந்தது. பாகிஸ்தானில் இதுவரை 3 அரசுகள் மட்டுமே 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்து உள்ளன. அதுவும், ஜனநாயக ரீதியிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு என்றால், அப்பாசியின் அரசு அத்தகைய இரண்டாவது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த 16 ஆண்டுகளில் 7 பிரதமர்களை தேர்வு செய்து உள்ளது.

    இடைக்கால பிரதமர் பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் நாட்டின் 7-வது இடைக்கால பிரதமர் என்ற பெயரைப் பெறுகிறார்.

    பதவி ஏற்பு விழாவில் முன்னாள் பிரதமர் அப்பாசி, படை தளபதிகள், செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி மற்றும் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும், இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்குக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    நீதிபதி நசிருல் முல்க், 1950-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி கைபர் பக்துங்குவா மாகாணத்தில் மிங்கோரா என்ற இடத்தில் பிறந்தவர். லண்டனில் பாரிஸ்டர் படிப்பு (சட்டப்படிப்பு) படித்து தேர்ச்சி பெற்றார். வக்கீலாக பணி ஆற்றி, பின்னர் பெஷாவர் ஐகோர்ட்டு நீதிபதியாக, அதன் தலைமை நீதிபதியாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக, பின்னர் 2014-ம் ஆண்டு அதன் தலைமை நீதிபதியாக பதவி வகித்து உள்ளார். நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்று உள்ளார்.

    முஷரப் ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக தீர்ப்பு அளித்த 7 நீதிபதிகளில் ஒருவராக இருந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.

    நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசு முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்திற்கும், புதிய அரசு பதவி ஏற்கும் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அரசு நிர்வாகத்தை கவனிக்கிற பணியை மட்டும் செய்யும்.  #Pakistan #PrimeMinister #NasirulMulk #Tamilnews 
    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.#PakistaninterimPM
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷனின் இடைக்கால தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.#PakistaninterimPM 
    ×