search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Football Federation"

    உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann
    பாரீஸ்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும். இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்பாப்பே, கீரிஸ்மேன் ஆகியோருக்கு இடம் கிடைத்து உள்ளது. இருவரும் இந்த உலக கோப்பையில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். இதேபோல பிரான்ஸ் நாட்டின் பின்கள வீரரான ரபெல் வரனேயும் அந்த பட்டியலில் உள்ளார்.

    உலக கோப்பையில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனும் இடம் பெற்றுள்ளார்.

    லியோனல் மெஸ்சி, கிறிஸ்டினோ ரொனால்டோ ஆகியோருடன் இவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு இடம் இல்லை.



    உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம்:-

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்பே, கிரீஸ்மேன், ரபெல் வரெ (பிரான்ஸ்), ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் (பெல்ஜியம்), ஹாரிகேன் (இங்கிலாந்து) மோட்ரிச் (குரோஷியா), முகமதுசாலா (எகிப்து). #KylianMbappe #AntoineGriezmann
    ×