search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL dream team"

    • ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
    • ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

    ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:-

    டோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா.

    கிரிக்இன்போ ஐபிஎல் கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மற்றும் ராயுடு இடம்பிடித்துள்ளனர். #IPL2018
    11-வது ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டம் முடிந்து ‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது.

    கிரிக்கெட் இணைய தளமான கிரிக்இன்போ ஐ.பி.எல். கனவு அணியை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, அம்புதி ராயுடு இடம் பெற்றுள்ளனர். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கனவு அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆல் ரவுண்டர்களான குர்னல் பாண்ட்யா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடமில்லை.

    கிரிக்கெட் இன்போவின் ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:-

    லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), சுனில் நரேன் (கொல்கத்தா), வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பண்ட் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), டோனி (விக்கெட் கீப்பர், சென்னை), ரஹித்கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை).#IPL2018
    ×