என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "IPL Final 2023"
- 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைடுத்து ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ், போர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஆவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தார்.
5 ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்று இன்றோடு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு ஜடேஜா கொண்டாடும் புகைப்படத்தைப் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
5⃣0⃣0⃣ days of "OHH JADDEEJJJJAAA" ? pic.twitter.com/aQv1dp1oJF
— Chennai Super Kings (@ChennaiIPL) October 9, 2024
- போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.
கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
- அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
- ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் 4-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் முதல் போட்டியில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரை அவுட் ஆக்கினால்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.
ஷுப்மன் கில் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து விளாசினார். குறிப்பாக ஆர்.சி.பி. அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்தடுத்து சதங்கள் விளாசினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்த சீசனில் மொத்தமாக 17 போட்டியில் 890 ரன்கள் எடுத்து, ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் பிடித்துள்ளார். விராட் கோலி 973 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 863 ரங்களுடன் ஜோஸ் பட்லர் 3-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 848 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 735 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்திலும், 122 பவுண்டரிகள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்திலும். 119 பவுண்டரிகள் அடித்து டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஷுப்மன் கில் 118 பவுண்டரிகள் நான்காவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் அவருக்கு அருமையாக அமைந்துள்ளது.
+2
- தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பிய ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடி காட்டினார்.
- சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.
ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர். சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்குகிறது.
- கனமழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.
- இன்று வானிலை சீராக இருந்ததால் மாலை 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.
இன்றும் மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் போட்டி பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அகமதாபாத்தற்கு மேற்கே மழை பெய்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு வானம் ஓரளவு தெளிவாக காணப்பட்டது. இதனால் சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விர்திமான் சகா, ஷுப்மன் கில் களமிறங்கினர். மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்