search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL franchises"

    • இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும்.
    • ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம், இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    ஆர்டிஎம் விதி என்பது, ஒரு அணி ஏலத்திற்கு முன்பு 3 வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏலத்தின் போது மற்ற அணி வீரர்கள் தங்களது வீரர்களை அதிக விலைக்கு எடுக்கும் போது ஆர்டிஎம் முறைப்படி அந்த வீரரை தனது அணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படியும் சில அணிகள் 8 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படி எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேகேஆர் அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம். இதன் மூலமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று, அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்தை பெற முடியும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. அதேபோல் மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.

    இதனிடையே பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் 3 வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். அதேபோல் இந்த அணிகள் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் ஊதியத்தை அதிகரிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    ஏனென்றால் இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த வீரர் மீண்டும் ஏலத்திற்கு செல்ல விரும்புவார். மும்பை போன்ற அணிகள் அவரை அணுகும் போது, சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

    இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், அவரின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அனுமதிக்க பல்வேறு அணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணமாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம் என்று அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பர்ஸ் தொகையாக ரூ.100 கோடி வரை அனுமதிக்கப்பட்டது. சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×