என் மலர்
நீங்கள் தேடியது "Iran Israel conflict"
- ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
- "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது
கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.
சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
போர்.. ஆமாம் போர்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
"ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களமிறங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.
ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.
நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.
இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.
12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- "வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்" கலங்குகிறது உலகு
- போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு
"வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்"
கலங்குகிறது உலகு
ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா
வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி
தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?
போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையே உறவு சீராக இல்லை
- ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மொஸ்தஃபா பங்கு பெற்றார்
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடு ஈரான். யூதர்களின் பெரும்பான்மை கொண்ட மற்றொரு மேற்கு ஆசிய நாடு இஸ்ரேல்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக பகை இருந்து வருகிறது. இஸ்ரேலை தனது நாடு என ஈரான் உரிமை கொண்டாடி வருவதால் உருவான இந்த பிரச்சினை, இரு நாட்டு உறவுகளையும் பல துறைகளில் மோசமடைய செய்திருக்கிறது.
2021-இல் ஈரானின் முக்கிய தலைவரான அயதுல்லா அலி கமேனி, ஈரான் நாட்டு விளையாட்டு வீரர்கள் எந்த உலக அரங்கிலும் இஸ்ரேல் நாட்டு வீரர்களுடன் கை குலுக்குதலில் ஈடுபட கூடாது என அறிவித்திருந்தார்.
பல ஆண்டுகளாகவே ஈரானின் ஓட்டப்பந்தய மற்றும் தடகள வீரர்கள் உலகளவில் நடைபெறும் போட்டிகளில், இஸ்ரேலி வீரர்களுடன் தனியாக போட்டியிடும் சூழலை தவிர்த்து வந்தனர். இதற்காக தாங்களாகவே தகுதிநீக்கம் பெறுவதும், மருத்துவ சான்றிதழ் வழங்கி போட்டியில் இருந்து விலகுவதும் கூட நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள விலிக்ஸ்கா நகரில், உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 40-வயதான ஈரான் நாட்டை சேர்ந்த பளுதூக்கும் வீரர் மொஸ்தஃபா ரஜேய் மேடையில், விளையாட்டுக்கான சம்பிரதாய முறைப்படி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் மக்ஸிம் ஸ்விர்ஸ்கி என்பவருடன் கை குலுக்கி கொண்டார்.
இந்த நிகழ்வையடுத்து ஈரான் நாட்டு பளுதூக்கும் விளையாட்டிற்கான கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "இஸ்லாமிய குடியரசின் சிகப்பு கோட்டை மொஸ்தஃபா தாண்டி விட்டார். மொஸ்தஃபா அவரது ஆயுட்காலம் முழுவதும் விளையாட்டுகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி போலந்து போட்டிக்கு வீரர்களை தலைமை ஏற்று செல்லும் பொறுப்பில் இருந்த ஹமித் சலேஹினியா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்," என்று குறிப்பிட்டு இருக்கிறது.
மொஸ்தஃபா, 2015-இல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈரான் நாட்டின் தேசிய அணி வீரராக பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- பதிலடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. சூளுரைத்ததுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. அதேபோல் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தாங்களும் தயார் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் டெலிபோன் மூலம் பேசினார். அப்போது ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்த கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளது. உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளது. பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நேதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளார்.
- ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
- வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதி உள்பட 12 பலியானார்கள்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அதை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தடுத்தது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.
மத்திய ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.
ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்தின. இஸ்ரேல் தாக்குதலையடுத்து ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.
முக்கிய நகரங்களான இஸ்பஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தாக்கு தலையடுத்து பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹானில் ஒரு பெரிய ராணுவ விமான தளம், யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப்பகுதியான நடான்ஸ் நகரம் உள்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ளன.
இதற்கிடையே இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்பஹானில் மூன்று டிரோன்கள் வாகனத்தில் காணப்பட்டதாகவும், அவற்றை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
- பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
- இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.
வாஷிங்டன்:
ஈரான் அதிபர் இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.
இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.
மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.
பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
- அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்றார்.
தெக்ரான்:
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கு தல் நடத்தியது. மேலும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் கமல் கர்ராசி கூறியதாவது:-
அணுகுண்டை உருவாக்குவது குறித்து எங்களிடம் எந்த முடிவும் இல்லை. அணுஆயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்றார்.
உலக வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருகிறது என்று கூறப்படுகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும்.
- கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மாட்ரிட்:
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பெல்ஜியத்துடன் இணைந்து இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி, டென்மார்க் கொடியுடன் மரியான் டானிகா என்ற கப்பல் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டு துறைமுகத்துக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் கூறும்போது, சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும். மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை, அதற்கு அதிக அமைதி தேவை என்றார்.
கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஏற்று மதிக்கு தடை செய்யப்படாத பொருட்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
- இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அந்த அமைப்பிற்கு ஆதரவாக உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை முன்னெடுக்கிறது இஸ்ரேல்.
இதற்கிடையே சுமார் 1½ லட்சம் கிலோ வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி. கேதரின் கப்பல் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்த ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.






