search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jai Saratha Matriculation School"

    • ஊழலற்ற பாரதம் - வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து ஊழலற்ற பாரதம்- வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சுரேந்திர கெளங்கர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது. பொது நலம் சார்ந்த சிந்தனை உடையவர்களாலேயே ஊழலை ஒழிக்க முடியும் என்றார். அதன் பின்னர் ஊழற்ற பாரதம், வளர்ந்த தேசம், ஊழல் ஒழிப்பு, சிக்கனமும் சிறுசேமிப்பும் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி, முதல்வர் மணிமலர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் சுரேஷ், லஞ்ச ஒழிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

    • மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

    பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் வரவேற்றார். திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ப.ராஜேஸ்வரி தலைமை தாங்கி, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கி, அவற்றை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார். பள்ளி மாணவ தலைவர் அகல்யா ஆங்கிலத்திலும், துணைத்தலைவர் காருண்ய பருணி தமிழிலும் போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கும் அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்" என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ×