என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jhalrapatan
நீங்கள் தேடியது "Jhalrapatan"
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #VasundharaRaje #Rajasthanpolls
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #VasundharaRaje #Rajasthanpolls

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #VasundharaRaje #Rajasthanpolls
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தனது சொந்த ஊரான ஜல்ராபதானில் போட்டியிடுகிறார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்ராபதான் தொகுதியில் முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா போட்டியிட முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள மக்களுடன் கடந்த 30 ஆண்டுகளாக நான் தொடர்பில் இருந்து வந்துள்ளேன். அவர்கள் என் மீது மிகுந்த அன்பும், உறுதியான பற்றும் கொண்டுள்ளனர். ஜலாவர் மற்றும் பாரன் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன் என தெரிவித்துள்ளார்.
வசுந்தர ராஜே கடந்த 2003, 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜல்ராபதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி முகுல் சவுத்ரி போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
×

X