search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "joint pain swelling"

    மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
    மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். கட்டை விரலில் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆய்வுகளின் படி 40 வயதினை கடந்தோருக்கு இது ஏற்படுகின்றது.

    ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. கட்டை விரலின் அடிப்பகுதியில் ஏற்படும் இப்பாதிப்பு கார்டிலிலேஜ் தேய்மானம் காரணமாக ஏற்படுகிறது. எதனையாவது கைகளில் எடுக்க முயலும்போது விரலில் வலி ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாக வெளிப்படும். மேலும்

    கட்டை விரலின் அடியில் வீக்கம்
    வலி, விரல் அசைப்பதில் கடினம்
    விரலில் பலமின்மை போன்றவை இருக்கலாம்.

    தேய்மானம் காரணமாக இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால் எலும்பு எளிதில் உடையும் அபாயமும் அதிகம் ஆகின்றது. மருத்துவர் பரிசோதனைகள் மூலம் பாதிப்பினை உறுதி செய்வார்.

    கட்டை விரல் பாதுகாப்பு

    * விரல்களுக்கான பயிற்சி
    * வீக்கம் குறைவதற்கான மருந்துகள்
    * அதிக கடின வேலை விரலுக்கு அளிக்காமை ஆகியவை மூலம் விரல் பாதுகாக்கப்படுகின்றது.
    * சில நேரங்களில் சிகிச்சை பயன் அளிக்காத போது அவசியம் ஏற்படின் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

    வைட்டமின் ஏ.சி.இ. இவைகள் வீக்கத்தினைக் குரைத்து மூட்டு அசைவுகளை எளிதாக்கும். மருத்துவ ஆலோசனை பெற்று இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    கொலஸ்டிரால் அதிகமாக இருப்பின் மருத்துவ உதவியோடு அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். கால்ஷியம், வைட்டமின் டி சத்து இவைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

    மீன், ஆலிவ் எண்ணெய், பால், தயிர், சீஸ், அடர்ந்த பச்சை நிறம் கொண்ட கீரைகள், காய்கறிகள், பிரோகலி, கிரீன்டீ, பூண்டு, கொட்டைகள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு மூட்டுகளுக்குக் கிடைக்கும்.
    ×