search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint Parliamentary Committee"

    • பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 8-ம் தேதி நடந்தது.
    • பாராளுமன்ற கூட்டுக்குழுவில் 31 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதால் இதற்கான மசோதா கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும், மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

    மொத்தம் 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டார். இதில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி பாராளுமன்ற மைய மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×