search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkadu Tiger Archive"

    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் பணிகளை தொடங்கி வைத்தார். வரும் 18-ம் தேதி வரை பணி நடக்கிறது.

    இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்பர்கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்கள் குறித்தும், கணக்கெடுப்பு நடத்துகின்றனர். வன சரக அலுவலர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன், அப்பர்கோதையாறு பாலாஜி ஆகியோர் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். கணக்கெடுப்பின் போது செங்கல்தேரி வனப்பகுதியில் புலிகளின் கால்தடங்கள், எச்சங்கள் கிடைத்துள்ளன.
    ×