என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kallakurichi Violence"
- கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஐகோர்ட் அனுமதி
- பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
- பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளதாக வழக்கறிஞர் தகவல்
- ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், "ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.
இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
- இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செயதுள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கூறியிருப்பதாவது:
பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின்படி, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது.
மாணவியின் கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், பாடம் படிப்பதில் மாணவிக்கு சிரமம் இருந்தது உறுதியாகி உள்ளது. தற்கொலைக்கு துண்டிய பிரிவில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தவறு. இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை.
மாணவி மாடியில் இருந்து விழும்போது மரத்தில் அடிப்பட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல, அது வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.
இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, வழக்கில் திருப்பதை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
- இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், கலவரத்தால் பள்ளிக்கு ரூ.25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரிசெய்வதற்காக வளாகத்திற்குள் அனு மதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரிசெய்ய அனுமதிக்காததன் மூலம் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி வளாகத்திற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை திறக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு அனுமதியின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும், ஒன்பது முதல் 12ம் வகுப்புகள் அருகிலுள்ள பள்ளியிலும் நடைபெற்று வருகிறது என்றார்.
அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னாவு, இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.
முதல்கட்டமாக பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகே பள்ளியை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.
- ஏற்கனவே 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.
இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதானவர்களில் 64 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், மற்ற 174 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இம்மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் 56 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மற்ற 49 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
- சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.
இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
- சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது தொடர்பாக தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (22), வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28), கச்சிராபாளையம் அருகே மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி (20), தியாகதுருகம் அருகே காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (18)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
- தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டு, 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் நான்கு முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வன்முறையின் போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24),கார்த்திக் (24) கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (20), கமல் ராஜ் (21), ஸ்ரீதர் (20), சத்தியமூர்த்தி (22), பாலமூர்த்தி (22), மற்றும் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய கடலூர் மாவட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுங்பதாக அரசு வழக்கறிஞர் முறையீடு
- 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.
மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
- கள்ளக்குறிச்சி காவல்துறை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
- தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பை அடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன.
- நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.
இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.
- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு இந்த அரசு தடுமாறி வருவதை நாடறியும்.
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி, கணியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அம்மாணவியின் குடும்பத்தினர் சரியான, நேர்மையான உடற்கூறு ஆய்வு நடவடிக்கை மற்றும் உள்ளூர் காவல் துறை மீதான சந்தேகத்தினால் CBCID காவல் விசாரணை ஆகிய கோரிக்கைகளை வைத்தனர்.
மேலும், தங்களது மகளின் இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும். கேளாக் காதினராய், இந்த முதலமைச்சரும், அவர் வசம் உள்ள காவல் துறையினரும், கல்வித் துறையினரும், ஏதோ ஒரு இனம்புரியாத காரணத்திற்காக கைகட்டி, வாய்பொத்தி மவுனம் காத்தார்கள்.
வெகுண்டெழுந்த பொதுமக்கள் கடந்த நான்கைந்து நாட்களாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். கலவரத்தை அடக்க முடியாமல் இந்த அரசின் காவல் துறை கையறு நிலையில் விழி பிதுங்கி நின்றது.
உளவுத் துறை சரியானபடி தகவல் சேகரித்து, காவல் துறைக்கும், அரசுக்கும் தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இக்கலவரத்தைத் தவிர்த்திருக்க முடியும்.
காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையையும், மகளை இழந்த பெற்றோரின் கோரிக்கைகளை உரிய நேரத்தில் இந்த அரசு ஏற்காததை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் தனது பேட்டியின்போது சுட்டிக்காட்டினார்.
கள்ளக்குறிச்சியே பற்றி எரியும் இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து கவலைப்படாமலும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறாமலும், இம்மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் திரு. எ.வ. வேலு, இந்தக் கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்?
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டிய பின்னர், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல், அமைச்சர் எ.வ. வேலு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்.
அதிமுக உட்கட்சிப் பிரச்சினையை திசை திருப்ப, கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக அமைச்சர் எ.வ. வேலு திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார். முறையாக செயல்படும் எங்கள் இயக்கத்தில் ஒருசில துரோகிகளுக்கு தோள்கொடுத்து, தூண்டிவிட்டு, குழப்பம் விளைவிப்பது இந்த விடியா திமுக அரசுதான் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
நான் ஏற்கெனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள எங்களது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது என்றும், காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரியும் புகார் அளித்திருந்தேன்.
ஆனால், கலவரக்காரர்களுக்கு ராஜமரியாதையுடன் பாதுகாப்பு அளித்து, எங்கள் கட்சித் தொண்டர்களை விரட்டி அடித்தது விடியா அரசின் காவல் துறை. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ரவுடிகள் தலைமைக் கழக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கதவுகளை எட்டி உதைத்து உடைத்ததுடன், அங்குள்ள பொருட்களை சூரையாடியதுடன், கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.
இச்சம்பவங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த விடியா அரசு, எங்கள் தலைமைக் கழக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து அற்ப சந்தோஷம் அடைந்துள்ளது. அடுத்தவர் பிரச்சினையில் எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் தலையிட்டு குழப்பம் விளைவிக்கும் இந்த விடியா அரசு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு தடுமாறி வருவதை நாடறியும்.
உட்கட்சிப் பிரச்சினையில் எடப்பாடியார் குழம்பிபோய் இருப்பதாக எ.வ. வேலு கூறி இருக்கிறார். எந்த நிலையிலும் எங்களுக்கு குழம்பும் பழக்கமோ, அடுத்தவர்களைக் குழப்பும் பழக்கமோ இல்லை. அதற்கு சொந்தக்காரர்கள் தி.மு.க-வினர்தான் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிவர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. அதோடு, பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளில் உள்ள பொருட்களை சூரையாடி உள்ளனர். மேலும், அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 3500 மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் அடியோடு எரிந்து சாம்பலாகி உள்ளன.
இதற்கு யார் பொறுப்பேற்பது? பாதிக்கப்பட்டுள்ள மாணவச் செல்வங்களுக்கு யார் பதில் அளிப்பது? அதற்குரிய நிவாரணம் என்ன? அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு தொடர்ந்து கல்வி கற்பார்கள் என்பதையும் இந்த அரசு விளக்க வேண்டும்.
மாணவியின் மரணத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக எ.வ. வேலு கூறுகிறார். இது, சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அந்த மரணத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த திமுக-வினர்.
மேலும், அப்போது திமுக தலைவர், அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்' என்று எக்காளமிட்டதை எ.வ. வேலு வசதியாக மறந்து விட்டாரா? தற்போது தங்களுக்கு ஒன்று என்றவுடன் கதறித் துடிக்கிறார்கள்.
எங்களின் தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்குள் கொள்ளையர்கள் அத்து மீறி நுழைந்து, கொள்ளை அடித்ததைக் கண்டு நாங்கள் எல்லாம் இதயம் வெதும்பி அழுதோம். அப்போது கைகொட்டி, சிரித்து வேடிக்கை பார்த்த இந்த ஆட்சியாளர்கள் போல் நாங்கள் இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட வேண்டும்; மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக எடப்பாடியார் செயல்படுகிறார்.
இந்த விடியா அரசு எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதில் முனைப்பு காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விடியா அரசின் முதலமைச்சர் அவர்கள் இதைத் தவிர்த்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முனைப்பு காட்ட வேண்டும்.
தற்போது இவ்வழக்கு தமிழக காவல் துறையின் CBCID விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பள்ளி மாணவி ஸ்ரீமதி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த அப்பாவி மாணவி எப்படி இறந்தார் என்றும், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும், சட்டப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
அதே சமயத்தில், இச்சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டு, மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டவர்களையும், உறுதுணையாக இருந்தவர்களையும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்நீதிமன்றமே இதன் விசாரணையை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளும் என்று கூறி உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், இந்த வழக்கை CBI வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்