search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamala Harris"

    • ஜனவரி முதல் வாரம் வரை ஜோ பைடன் அதிபராக இருப்பார்.
    • இந்த இடைக்காலத்தில் கமலா ஹாரிஸை முதல்வராக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார்.

    இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல் பெண் அதிபர் என்ற சாதனையாகிவிடும் என கமலா ஹாரிஸின் முன்னாள் தகவல்தொடர்பு இயக்குனர் ஜமால் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜோ பைடன் அற்புதமான அதிபர். அவர் தெரிவித்த ஏராளமான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். அங்கு ஒரு வாக்குறுதி மீதமுள்ளது. அதை அவர் ஒரு இடைக்கால உருவமாக நிறைவேறற முடியும். அடுத்த 30 நாட்களுக்கான அதிபர் என்பதை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸை நியமிக்க வேண்டும்.

    இது ஜோ பைடனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதை அவர் செய்து, தனது கடைசி வாக்குறுதியை நிறைவேற்றினால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47-வது அதிபராகும் வாய்ப்புள்ளது" என்றார்.

    • 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    • வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஸ்விங் மாகாணங்கள் ஆகும்.

     உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.

    அமெரிக்க தேர்தல் நடைப்முறைப்படி 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்கள். அந்த வகையில் 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    வெற்றியை மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவையும் இந்த முறை டிரம்ப்புக்கு அமோக ஆதரவளித்துள்ளன.

     

    இதில் அரிசோனா மாகாணத்தில் முடிவு மட்டும் வெளியாகவில்லை. அங்கு அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானவதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

    இந்த நிலையில் மற்ற 6 ஸ்விங் மாகாணங்களில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது அரிசோனாவிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாகாணங்களின் தேர்தல் முடிவுகளில் டிரம்பின் வாக்கு எண்ணிக்கை 312-ஆக உயர்ந்தது. கமலா ஹாரிஸ் 226 வாக்குகள் பெற்றார்.

    இதற்கிடையே வருகிற 13-ந்தேதி டிரம்ப்-ஜோபைடன் அதிகார பரிமாற்றம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்கள். வரும் ஜனவரி மாதத்துடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • டொனல்டு ட்ரம்ப் சிலைக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    அமெரிக்க துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி ஆந்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் தெலுங்கு மக்கள் ஜேடி வான்ஸ் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள கொன்னே கிராம மக்கள் டொனால்டு டிரம்ப்பிற்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.

    கிருஷ்ணா என்ற இளைஞர் 2018 ஆம் ஆண்டு தனது பூஜை அறையில் டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது வீட்டின் முன்பு 6 அடி உயர டிரம்ப் சிலையை அமைத்து பூஜைகள் செய்து பால் அபிஷேகமும் செய்தார். இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தார். இதனால் அந்த கிராமத்தினர் அவரை ட்ரம்ப் கிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணா தனது 33வது வயதில் 2020 அக்டோபரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ட்ரம்ப் வெற்றியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணாவின் உறவினர்கள் அவரது வீட்டில் உள்ள ட்ரம்ப் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார்.
    • கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் இந்தியாவில் கூகுளில் பலரும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்பை தேடி வந்தனர்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் டொனால்டு டிரம்பை அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.

    கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழ்நாட்டில் அவரை அதிகபேர் தேடியுள்ளனர்.

    கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக அவரது பூர்விக கிராமமான திருவாரூர் மாவட்டத்தை அடுத்த துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அவரது பூர்விக கிராமத்தில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.
    • அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இந்திய நேரப்படி நேற்று உரையாற்ற இருந்தார். ஆனால் தோல்வியை நோக்கி சென்றதால் உரையாற்றவில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:-

    * ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்

    * நமது சுதந்திரத்திற்காக போராடுவது கடின உழைப்பை எடுக்கும். ஆனால் நான் எப்போதும் சொல்வதுபோல் நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம். நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்புக்குரியது

    * சில நேரங்களில் போராட்டத்தில் வெற்றி கிடைக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நாம் வெற்றிபெற மாட்டோம் என்று அர்த்தமல்ல. முக்கிய விஷயம் என்னவென்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள்.

    * இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும் பிரசாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன்.

    * அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும்.

    * இன்று முன்னதாக, நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடன் பேசினேன், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்

    * டிரம்ப் மற்றும் அவரது குழுவின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்

    * தேர்தலில் போட்டியிட்டது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    * இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.

    * முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

    * நாம் போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதி வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக எரியும்.

    இவ்வாறு கமலா ஹாரிஸ் தனது உரையின்போது தெரிவித்தார்.

    • அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஸ்கான்சினில் வெற்றி பெற்றதன் மூலம் அதிபர் பதவிக்கு தேவையான 270 தேர்தல் வாக்குகளை டிரம்ப் பெற்றார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும், மாற்றம் குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகை வரும்படி அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை ஒரு தேதியை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டொனால்டு டிரம்ப் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று காலை நடைபெற்று முடிந்தது. உடனே வாக்குகளை எண்ணும் பணிகள் துவங்கின. அமெரிக்காவில் அதிபர் பதவியை பெற வேட்பாளர் குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

    அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை வென்றுள்ளார்.

    வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

    கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக அவரது பூர்விக கிராமமான திருவாரூர் மாவட்டத்தை அடுத்த துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அவரது பூர்விக கிராமத்தில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஸ்விங் ஸ்டேட்டசில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.  

    கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வழக்கமாக இழுபறி ஏற்படும் ஸ்விங் ஸ்டேட்சிலும் டிரம்ப் வெற்றி பெற்றார். எலக்ட்டோரல் வாக்குகளாகவன்றி மக்கள் செலுத்திய வாக்குகள் அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு மொத்தமாக 70,952,259 வாக்குகள் [51%] கிடைத்துள்ளது. கமலாவின் ஜனநாயக கட்சிக்கு  66,046,171 [47.50%] வாக்குகள் கிடைத்துள்ளது.

    மொத்தம் உள்ள 50  மாகாணங்களின் வெற்றிப் பட்டியல்

    டிரம்ப் வென்ற மாகாணங்கள் - அலபாமா, அலாஸ்கா, அரிசோனா , ஆர்கன்சாஸ், புளோரிடா, ஜார்ஜியா , இடாஹோ, இன்டியானா, அயோவா, கான்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிச்சிகன், மிஸிஸிப்பி, மிசெளரி, மோன்டனா, நெப்ரஸ்கா, நெவேடா, வடக்கு கரோலினா, வடக்கு டகோடா, ஓஹையா, ஆக்லஹோமா,பென்சில்வேனியா, தெற்கு கரோலினா, தெற்கு டகோடா, டென்னஸ்ஸி, டெக்ஸாஸ், உடா ,மேற்கு விர்ஜீனியா, விஸ்கான்சின், வியாமிங் என 31 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

    கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் - கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட் , டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலான்ட், மாஸசூட்ஸ் , மின்னசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜீனியா, வாஷிங்டன், டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா 19 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

    • கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார் .
    • வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

    கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார் . பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும். இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த முறை ஸ்விங் ஸ்டேட்ஸிலும் தொடங்கத்தில் இருந்து டிரம்ப் முன்னிலையில் இருந்தார். ஆனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கமலாவும் நெருங்கி வந்ததால் எந்த நேரமும் ரிசல்ட் மாறலாம் என்ற சூழல் நிலவியது. ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்பார்ப்புகளை பொய்யாகி ஸ்விங் மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

    ஸ்விங் ஸ்டேட்டஸ் தேர்தல் வெற்றி

    பென்சில்வேனியா-  2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.         

    நெவேடா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் வென்றிருந்தார்.

    மிச்சிகன்- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    ஜார்ஜிய- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    அரிசோனா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    வடக்கு கரோலினா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்
    • உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு  இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார்.

    அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா கவனம் பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு எதிரான குடியரசுக் கட்சியின் நகர்வாக இது பார்க்கப்பட்டது.

    உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது. 1970களில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான் டியகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜன்நாயக கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது ஜேடி வான்ஸ் துணை அதிபர் ஆகியுள்ள நிலையில் உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்நத ஒருவர் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை ஆகும் 

    • அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.
    • முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை நிறைவுபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறஉ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார்.

    இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    • வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார்.
    • அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

    வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார். மேடைக்கு தனது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோருடன் வந்த டிரம்ப்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இதுவாகும். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும்.

    அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். என்னை தேர்வு செய்த அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். எனது அழகான மனைவி மெலானியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார்.எலான் மஸ்க்கை குறிப்பிட்டு,  ஒரு நட்சத்திரம் உதயமாகிவிட்டதாக டிரம்ப் தனது உரையின்போது நெகிழ்ந்தார்.

    ×