search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari fishermen"

    ‘கஜா புயல்’ காரணமாக நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி மாவட்ட மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #GajaCyclone #GajaStorm #Fishermen
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த புயலானது கடலூர்-பாம்பனுக்கு இடையே நாளை மறுநாள் (15-ந்தேதி) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. நாகர்கோவில், சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 48 மணி நேரம் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள பங்கு தந்தைகள், மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.



    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி கடல் பகுதியில் இன்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென்று எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.  #GajaCyclone #GajaStorm #Fishermen

    வானிலை மையம் விடுத்த புயல் எச்சரிக்கை போய் சேராததால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1000 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. #TNRain #RedAlert #KanyakumarFishermen
    கன்னியாகுமரி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி பின்னர் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு ஏற்கனவே சென்றவர்கள் 5-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.



    இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இன்று காலை வரை அவர்கள் வராததால் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    அரசு விடுத்த புயல் குறித்து அரசு எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் அவர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து ராணுவம், கப்பல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் தகவல் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் இருப்பதாக சக மீனவர்கள் கூறியுள்ளனர். #TNRain #RedAlert #KanyakumarFishermen
    மங்களூரு அருகே படகு சேதமாகி கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடற்படை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
    மங்களூரு:

    கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி மற்றும் தென்கனராவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா அறிவித்து இருந்தது. இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் இந்த தகவலை அறியாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி வழியாக மங்களூருவில் இருந்து 15 மைல் தொலைவில் நங்கூரம் இட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சேதம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

    இதுகுறித்து அறிந்த மங்களூரு கடற்கரை பாதுகாப்பு படையினர் கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் கர்நாடக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    ×