என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kasimedu Market"
- வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
- சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.
ராயபுரம்:
ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை
விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
- வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன.
- மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ராயபுரம்:
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் இருப்பது வழக்கம். இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு மாத விரதத்துக்கு பின்னர் ஏராளமானோர் குவிந்ததால் மீன் விற்பனை களைகட்டியது.
இன்று காலை 110 விசை படகுகள் வரை கரைக்கு திரும்பியதால் பெரிய வகை, சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் கிலோ ரூ. 350 விற்கப்பட்ட நண்டு இன்று ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. வஞ்சிரம்-ரூ.700, சங்கரா-ரூ.400-க்கு விற்பனை ஆனது.
புரட்டாசி மாதம் முடிந்தாலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருவதால் அதிகமானோர் இன்னும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே நவராத்திரி விழா முடிந்த பிறகு மீன்கள் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட இன்று வியாபாரம் அதிகம் இருந்தது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு இறைச்சி வியாபாரம் பழைய நிலைக்கு வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை (கிலோவில்) பட்டியல்:-
வஞ்சிரம் - ரூ.700
வவ்வா - ரூ.450
கடமா - ரூ.450
இறால் - ரூ.400
சங்கரா பெரியது - ரூ.400
நண்டு - ரூ.500
- வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
- அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராயபுரம்:
புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
பெரிய இறால் - ரூ. 300.
இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.
- காசிமேடு மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
- வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாசமாக பேசினார்.
ராயபுரம்:
காசிமேடு பழைய கடலோரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று காலை வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாசமாக பேசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஒன்று திரண்டு துடைப்பம், பிளாஸ்டிக் பைப்பால் அந்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கினர். அடி தாங்க முடியாத அந்த வாலிபர் அங்கு மீன் வெட்டிக்கொண்டிருந்த ஒருவரது கத்தியை எடுத்து மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் மார்க்கெட் பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்