என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kerala nun case
நீங்கள் தேடியது "Kerala nun case"
கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியாரின் மரணத்தில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்தக்கோரி அவரது குடும்பத்தினர் ஆலப்புழா போலீசில் புகார் அளித்துள்ளனர். #FatherKuriakose #FatherKuriakosedeath #Keralanuncase
சண்டிகர்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் இந்த சந்தேக மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். #FatherKuriakose #FatherKuriakosedeath #Keralanuncase

கேரள பாதிரியாருக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் ஒருவர் ஜலந்தரில் இன்று மரணம் அடைந்தார். #KeralaNunCase #FrancoMulakkal
ஜலந்தர்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி டிஎஸ்பி ஷர்மா கூறுகையில், “செயின்ட் பால் தேவாலயத்தில் பாதிரியார் குரியகோஸ் வசித்து வந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த காயமும் இருந்ததாக தகவல் இல்லை. படுக்கையில் வாந்தி எடுத்திருக்கிறார். ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு தெரிந்தவரை, அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை” என்றார்.
பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaNunCase #FrancoMulakkal
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaNunCase #FrancoMulakkal
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் நிராகரித்தது. #FrancoMulakkal #Kerala
கொச்சி:
கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதமும் அவர் எழுதினார். இதனை தொடர்ந்து பிஷப் செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கன்னியாஸ்திரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிஷப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக முல்லக்கல் விடுவிக்கப்பட்டார். தற்போது, விசாரணைக்காவலில் உள்ள அவர் ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று நீதிமன்றம் நிராகரித்தது.
கேரள கன்னியாஸ்திரி கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #Jalandharbishop
கொச்சி:
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் ஒரு மனுதாரர் கோரி இருந்தார்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை வெளியிட்ட நீதிபதிகள், பேராயரிடம் 19-ந் தேதி போலீசார் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்தனர்.
இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால், விசாரணைக்கு சிலகாலம் பிடிக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து போலீசார் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. #Jalandharbishop

×

X