என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KG Chavadi home theft"
கோவை:
கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ள மஸ்திகவுண்டன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர் அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ரவிக்குமார் கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்நபரை தேடிவந்தனர். நேற்று அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 15 வயது சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் அரசம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருவதும் தான் தான் ரவிக்குமார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான்.
இதனையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.