search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knitwear company"

    • பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் (55) என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நிறுவனம் மூடப்பட்டு சென்ற நிலையில் பணிக்கு யாரும் வேலைக்கு வராததால் காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காவலாளி சென்று பார்த்த போது பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளர் மற்றும் தீயானைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனம் முழுவதும் பின்னலாடை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மளமளவென நிறுவனம் முழுவதும் தீ பரவியுள்ளது.

    திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் உற்பத்தி செய்து பண்டல் போட்டு வைக்கப்பட்டிருந்த துணிகள், பின்னலாடை இயந்திரம் , கட்டிடம் என பல கோடி மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பின்னலாடை நிறுவனங்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
    • 15 ஓவருடன் லீக் சுற்று, 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் தினமும் ஓய்வின்றி உழைக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபடும் தொழிலாள ர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் பின்னலாடை நிறுவனங்களு க்கிடையே நட்புறவை மேம்படுத்த நிப்ட்-டீ கல்லூரி ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. அவ்வகையில் 6-வது என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், வருகிற ஏப்ரல் 2-ந்தேதி துவங்குகிறது. நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கி ழமை போட்டிகள் நடை பெறும். 15 ஓவருடன் லீக் சுற்று , 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மட்டுமே என்.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும். உள்நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனம் என பின்னலாடை துறை சார்ந்த எந்தவகை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளரும் பங்கேற்கலாம்.

    தொழிலாளர் அல்லாத வேறுநபர்களை அணியில் சேர்க்க கூடாது. குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரிவ தற்கான அடையாள அட்டை,கடைசி மூன்று மாத சம்பள ரசீது, வீரரின் புகைப்படம், பணிபுரியும் நிறுவன நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு என்.பி.எல்., சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    பங்கேற்க விரும்பும் பின்னலாடை நிறுவன கிரிக்கெட் அணியினர் https://www.nifttea.ac.in/npl-2023 என்கிற தளத்தில் வருகிற 27-ந் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 95971 54111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×