என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "kodaikanal lodge"
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் இளம்வயது வாலிபர்களை குறிவைத்து சமூகவிரோத கும்பல் போதை காளான், அழகிகளை வைத்து மயக்கி வருகின்றனர்.
இதனால் அந்த வாலிபர்கள் மீண்டும், மீண்டும் கொடைக்கானலுக்கு இதற்காகவே வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாலிபர்களிடம் பணத்தை கரந்து ஏமாற்றிச்செல்கின்றனர்.
பாம்பார்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாம்பார் புரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், மார்டின் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விடுதியில் இருந்த வெளிமாநில பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் எனது தோழிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கி இருந்தோம்.
நள்ளிரவு 1 மணிக்கு லாட்ஜுக்கு வந்த அப்போதைய கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் ஆபாச நடனம் ஆடியதாக கூறி எங்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews