என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kolkata airport"
- சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.
சாகேலி ருத்ரா என்பவர் 'ரீல்ஸ்' வீடியோ உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்தநிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு வளாகத்தில் சாகேலி ருத்ரா ஆட்டம் போட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து பிரபலமான திரைப்படத்தின் இந்தி பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.
- நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
- கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.
கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் லேன்டிங் கியர் அருகில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லாரியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
103 பயணிகள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 3 மணிக்கு தோகா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறப்பதற்கு சற்றுமுன் இந்த விபத்து ஏற்பட்டதால் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். #QatarAirwaysPlane #KolkataAirport
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்