என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "komarapalayam"
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி நேற்று முன்தினம் திருட்டு போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் தேடியபொழுது குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவில் திருட்டுப்போன லாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மற்ற டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மீட்டனர். அப்போது லாரியின் உள்ளே வீ.மேட்டூர் பகுதியினை சேர்ந்த முருகேசன் என்பவர் படுத்திருந்தார். அவரை பிடித்து லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முருகேசனை மரத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள். இதில் அவர் இறந்து விட்டார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார், முருகேசன் திருடிசென்ற லாரியின் உரிமையாளர் சின்னதம்பி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது குமாரபாளையம் பச்சாம்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சின்னதம்பி (47) மற்றும் டிரைவர்கள் மலையம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (எ) ராஜா கண்ணு (58) படைவீடு பகுதியினை சேர்ந்த சதாசிவம் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே படவீட்டில் சிமெண்ட் ஆலை உள்ளது. இதன்அருகே ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு இந்த லாரியை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்தார்.
அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மற்றும் சகடிரைவர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் லாரியை மீட்டு கொள்ளையனையும் குமாரபாளையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசில் அவரை ஒப்படைப்பதற்காக அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்ட டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையுண்ட கொள்ளையன் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்