என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kottamangalam"
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
- வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
உடுமலை:
உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
உடுமலை :
உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் இடங்கள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.
- சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
- பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.
குடிமங்கலம் :
குடிமங்கலம் ஒன்றியம்கோட்டமங்கலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
குடியிருப்பு கட்டும் போதே வடக்கு பகுதியில் மழை நீர் உள்ளே வராமல் தடுக்க சுற்றுசுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குடியிருப்புக்கான பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது.உடுமலை ஒன்றியம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இந்தாண்டு இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்