search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koupidu Pilliyar Temple"

    • காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல்.
    • பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கும்பாபிஷேகப் பணிகள் 24ந் தேதி காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன வழிபாடு, பேரொளி வழிபாடு, நடைபெற்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கியது. திருக்குடங்கள் வேள்விசாலையில் எழுந்திருதல், 108 மூலிகை ஆகுதி, திருமுறை விண்ணப்பம், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5;30 மணிக்கு, பிள்ளையாருக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றது. கூப்பிடு பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் இன்று காலை யாக வேள்வியுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. 8: 30 மணிக்கு விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூப்பிடு பிள்ளையாருக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெ ற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காரணம்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து ஊர் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அந்தப் பகுதியே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

    காரணம்பேட்டை கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, கரடிவாவி, சூலூர், பல்லடம், திருப்பூர் கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கூப்பிடு பிள்ளையார் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

    ×