search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KP Anbazhagan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
    • சட்டமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினர் கே.பி.அன்பழகனை பரிசோதித்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபின் அவரது அறையில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

    இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினர் கே.பி.அன்பழகனை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

    முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

    • நீதிமன்றத்தில் ஆஜரானவர்களிடம் நீதிபதி கேள்விகளை கேட்டார்.
    • வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    தருமபுரி:

    கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக அவர் மீது 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இன்று 2 வது முறையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானர். அவர்களிடம் சில கேள்விகளை நீதிபதி கேட்டார்.

    பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    தருமபுரி:

    பொதுக்கூட்ட மேடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிடம் தருமபுரி மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் விமர்சித்தும் வீண் வதந்திகளை பரப்பியும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மேற்கு மாவட்டம் துணை அமைப்பாளர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் கவுதம் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
    • கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கடந்த 19-1-2022 தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 20-1-2022 தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரேகோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும், கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மருமகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.பி.அன்பழகன் தேர்தலின் போது வேட்பு மனுவில் கூறியிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.
    • அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ண மூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதன்படி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கே.பி.அன்பழகன் தேர்தலின் போது வேட்பு மனுவில் கூறியிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில், புகார்தாரரான கிருஷ்ண மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தாலும், இதுவரை குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ×