search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna Kumari Rai"

    • முதல் மந்திரியின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • இவர் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.

    காங்டாக்:

    சிக்கிம் சட்டசபை தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    முதல் மந்திரியின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.

    இதையடுத்து, நேற்று சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், கிருஷ்ண குமாரி ராய் இன்று திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகினது. ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

    முதல் மந்திரி பிரேம் சிங் தமங் அருணாசலப் பிரதேசத்தில் முதல் மந்திரி பீமா காண்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற நேரத்தில் அவரது மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×