என் மலர்
சிக்கிம்
- சிறுவனின் செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள மலைகள், காடுகள் போன்ற இயற்கை சூழலை காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். ஜூலுக் நகருக்கு சுற்றுலா பயணிகள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிறுவன் தனது தம்பியின் கையை பிடித்துக்கொண்டு சென்றான். சுற்றுலா பயணிகளை பார்த்த அந்த சிறுவன் அவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என தனது மழலைக்குரலில் கேட்டான். அதற்கு அவர்கள் ஐதராபாத்தில் இருந்து வருவதாக கூறினர்.
இதனையடுத்து வாலிபர்கள் அந்த சிறுவனிடம் ஊரை கேட்டனர். அதற்கு தான் இதே பகுதியைச் சேர்ந்தவன்தான் என கூறிவிட்டுச் சென்றான். சிறிதுதூரம் நடந்து சென்ற அவன் உங்களுக்கு மிட்டாய் வேண்டுமா? என கேட்டான். அப்போது அவர்களின் பதிலுக்காக காத்திராமல் தனது கையில் இருந்த இனிப்புகளை அவர்களுக்கு வழங்கி விட்டு பின்னர் தனது தம்பியுடன் சென்றான். சிறுவனின் இந்த செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
- ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.
மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.
- டீஸ்டா ஸ்டேஜ் 5 அணை மின் நிலையம் 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடையது.
- நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது .
510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.
அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- சிக்கிமில் கனமழை பெய்து வருவதால் பல முக்கிய இடங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- சிக்கிமில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல முக்கிய இடங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், மழையால் துண்டிக்கப்பட்ட சிக்கிமின் காங்டாக்கின் டிக்சு-சங்க்லாங் சாலையில் 70 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் ஒன்றை ராணுவத்தினர் கட்டியுள்ளனர்.
ஜூன் 23 ஆம் தேதி பாலத்தில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 72 மணிநேரத்தில் இந்திய ராணுவத்தினர் பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
- சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
- 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காங்டாங்:
சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற மாங்கன் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த மாவட்டத்தின் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் ஆகிய நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருந்தனர்.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சிக்கிம் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு குவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், சிக்கிம் நிலச்சரிவில் சிக்கியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று கடைசி கட்டமாக சிக்கியிருந்த 150 சுற்றுலா பயணிகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- சிக்கிமில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
- இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
காங்டாங்:
சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற மாங்கன் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த மாவட்டத்தின் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் ஆகிய நகரங்கள் தற்போது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கனமழையால் மாங்கன் மாவட்டத்தில் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில், சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர் என அம்மாநில முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
- முதல் மந்திரியின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.
காங்டாக்:
சிக்கிம் சட்டசபை தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
முதல் மந்திரியின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.
இதையடுத்து, நேற்று சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கிருஷ்ண குமாரி ராய் இன்று திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகினது. ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.
முதல் மந்திரி பிரேம் சிங் தமங் அருணாசலப் பிரதேசத்தில் முதல் மந்திரி பீமா காண்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற நேரத்தில் அவரது மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிக்கிம் ஆளுநர் லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சி
- மொத்தம் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் SKM மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இமயமலையை ஒட்டிய வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் 2024 மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் அங்கு ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா [SKM] வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.
மொத்தம் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் SKM மீண்டும் ஆட்சியமைக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்தில் மற்றோரு மாநிலக் கட்சியான SDF வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக SKM கட்சித் தலைவர் பிரேம் சிங் தாமங் 2 வது முறையாக மீண்டும் சிக்கிம் முதலைவராக இன்று மாலை பதவி ஏற்க உள்ளார்.

இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் பிரேம் சிங்கிற்கும் புதிய அமைச்சர்களுக்கும் சிக்கிம் ஆளுநர் லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ள பால்ஜோர் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 30,000 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் 1 மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ள நிலையில் அதிலும் SKM கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது.
- சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்கு டன் வெளியிடப்பட்டன.
சிக்கிமில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது. மேலும் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய முதலவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலைவராகிறார். இதைத்தொடர்ந்து எஸ்.கே.எம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடாத தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் ஜன்னநாயக முன்னணி கட்சி 1 இடத்தில வென்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் 1 இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
- சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
காங்டாக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் செல்வாக்குமிக்க மாநில கட்சியான சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
முதல்-மந்திரியாக பிரேம்சிங் தமாங் ஆட்சி நடத்தி வந்தார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதால் பாராளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது.
சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களில் யார்-யார் வெற்றி பெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய கடசிகளானபாரதீய ஜனதாவுக்கும், காங்கிர சுக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாததால் அந்த குட்டி மாநிலத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை.
இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங் முதல் சுற்று முடிவில் 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதே சமயத்தில் முன்னாள் முதல்-மந்திரி பவன்குமார் முதல் சுற்றில் பின்தங்கி இருந்தார்.
அதுபோல பிரபல முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியாவும் தனது பார்புங் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இதனால் சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா மீண்டும் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சி 90 சதவீத வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்கிறார்.
- சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
- சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.