என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kulgam Encounter"
- பாதுகாப்புப் படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- இந்த என்கவுண்டரில் 2 போலீசார் வீர மரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்நிலையில், குல்காம் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 6 ஆனது என போலீசார் தெரிவித்தனர்.
- ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள், காஷ்மீர் பண்டிட்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- குல்காம் மாவட்டத்தில் மே 30-ம் தேதி பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையில், கடந்த மாதம் 30-ம் தேதி பள்ளி ஆசிரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டரிகாம் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார். மேலும் ஒரு ராணுவ உயரதிகாரி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், நேற்றைய தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் உடலுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக், போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். #Pakistaninationalskilled #Kulgamencounter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்