search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • பாராளுமன்ற தேர்தலின் 4-வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.
    • ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வாக்களித்தார்.

    ஸ்ரீநகர்:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 4-வது கட்டமாக 96 தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    அதன்பின், பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்குமே வன்முறை இல்லை. அமைதி நிலவுகிறது என சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க. அரசு, எங்கள கட்சியினரை கடந்த 2 நாட்களாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளை வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பா.ஜ.க. பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.
    • பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

    இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார்.

    பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    • கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.
    • 2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் லட்சாதிபதியான உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், வணிக கட்டிடம், கார் அல்லது வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லை என்பது அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்து வரும் ஓய்வூதியம் மட்டுமே அவரது வருமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2009-14 வரை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பணியாற்றிய உமர் அப்துல்லாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.54.45 லட்சமாகும். அவரிடம் ரூ. 95 ஆயிரம் ரொக்கம் இருந்தது. வங்கிகளில் ரூ.23.48 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள விவாகரத்து முடிவால் மனைவியை பிரிந்திருப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அவரது வருமானம் 2019-20-ல் ரூ.7.92 லட்சம் 2020-21-ல் ரூ.11.73 லட்சம், 2021-22 ல் ரூ.10 லட்சம், 2022-23-ல் ரூ.19.39 லட்சம் மற்றும் 2023-24-ல் ரூ.13. 20 லட்சம் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவர் முதன்முதலில் 1998-ல் ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 1999-ல் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2008-ல் சோனாவர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் மந்திரியானார். 2014-ல், 2 இடங்களில் போட்டியிட்டு சோனாவர் தொகுதியில் தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தார், ஆனால் மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.

    • வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது. வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது.

    வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.

    • விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்.
    • பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் சென்றபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியாக செல்லும் வாகனங்களை மறித்து போலீசார், பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்.
    • மெகபூபா முப்தி உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.

    இந்த நிலையில் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந்தேதிக்குப் பதிலாக மே 25-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார். 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதனால் அனந்த்நாக்-ரஜோரி தொகுதி 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது
    • பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்நிலையில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

    மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.

    • கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை.
    • வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-

    பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென் இந்தியாவில் தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏனென்றால் வடஇந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் இடங்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்விகளை சரிகட்ட, அவர்கள் தென்இந்தியாவில் பிரசாரம் செய்கிறார்கள்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. பா.ஜனதா 200 இடங்ளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பா.ஜனதா சொல்கிறது. சமீபத்தில் இரட்டை என்ஜின் அரசான பா.ஜனதாவை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்த்தியது. தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதாவின் கனவை தகர்த்தது.

    பிரதமர் மோடி 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

    ×