search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kupwara encounter"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில், பலியான ராணுவ வீரரும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நாயகனுமான சந்தீப் சிங்குக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. #JammuAndKashmir #LanceNaikSandeepSingh #KupwaraEncounter #SurgicalStrike
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் கடந்த 2016 செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில், அதே மாதம் 29-ம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கு இருந்த பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்தது.

    இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பங்கு பெற்ற வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. எவ்வித சேதமும் இன்றி, எதிர் நாட்டுக்குள் நுழைந்த வீரர்களுக்கு புகழ்மாலை சூட்டப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த பயங்கரவாதிகளுடனான மோதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனில் பங்கு பெற்ற வீரரான லான்ஸ் நாயக் சந்தீப் சிங் வீர மரணம் அடைந்தார். இவர் மரணிப்பதற்கு முன்பாக 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.



    இன்று இவரது உடலுக்கு ராணுவத்தினரின் இறுதி மரியாதை செய்யப்பட்டது. குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 5 வயது மகன் உள்ளனர். #JammuAndKashmir #LanceNaikSandeepSingh #KupwaraEncounter #SurgicalStrike
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuAndKashmir #Kupwara #Encounter
    குப்வாரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    குப்வாரா மாவட்டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 



    கடந்த ஆண்டு 220 பயங்கரவாதிகளும், இந்த ஆண்டு இதுவரை 142 பயங்கரவாதிகள் என கடந்த 2 ஆண்டுகளில் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #Kupwara #Encounter

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #KupwaraEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் கச்சூ கிராமத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ராம் பாபு சஹாய் என்ற ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறியும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #KupwaraEncounter
    ×